திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதாரத்துறை ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் பாய்க்கடை தெருவில் உள்ள நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் செயல்படுகிறது. இங்கு போதுமான தடுப்பூசி இல்லாத காரணத்தால் கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்றும் தடுப்பூசிக்காக நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த நிலையில், அவர்களை திரும்பி செல்லுமாறு முகாம் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்துவது குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் முறையாக அறிவிப்பு பலகையில் கூட எழுதாமல் இருப்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முகாம் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, நூறு ரூபாய் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
Discussion about this post