கொரோனா பரவல் தணியும் வரை, பொதுமக்கள் நலன் கருதி, கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
கொரோனா 2-ம் அலையை தடுக்க, அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே விமான பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். கொரோனா பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது நலன் கருதி, கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
Discussion about this post