நாமக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்துகளை வழங்கிட, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென, முன்னாள் அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில், கொரோனா தொற்று பாதித்த
குடியிருப்பு பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில், கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில், தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அதிமுக சார்பில் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் பரமத்திவேலூர் அதிமுக எம்.எல்.ஏ. சேகர், நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டத்திற்கு தடுப்பூசிகள்
குறைவாகவே வந்துள்ள நிலையில், கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். அதே போன்று, நாமக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகமாகியுள்ளதால், அதற்கு தேவையான மருந்துகளை கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post