பெட்ரோல் விலை மேலும் 24 பைசா அதிகரித்ததைத் தொடர்ந்து, லிட்டர் 97 ரூபாய் 43 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளதால், தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தினம்-தினம் பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், பெட்ரோல் விலை மேலும் 24 பைசா உயர்ந்ததால், சென்னையில் பெட்ரோல் விலை 97 ரூபாய் 43 பைசாவாக உள்ளது.
இதேபோன்று, டீசல் விலை 22 பைசா உயர்ந்ததையடுத்து, 91 ரூபாய் 64 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்னும் சில தினங்களில் 100 ரூபாயை கடந்துவிடும் என்பதால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
Discussion about this post