மேட்டூர் அணை இன்று திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மெத்தனமாக நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூர்வாரும் பணிகள் மிகவும் தாமதமாககத் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், ஏற்கெனவே தூர்வாரப்பட்ட இடத்திலேயே மீண்டும் பணிகள் நடைபெறுவதாக விமர்சித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் நீர் நிலைகள் போர்க்கால அடிப்படையில் தூர் வாரப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள், காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யப்படுவதால், கடைமடை வரை தண்ணீர் வருவதை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படாததால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். சீர்காழி உள்பட பல்வேறு இடங்களில் அரசின் நடவடிக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Discussion about this post