சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட, 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை ஏக்கர் சொத்தை மீட்டதாக திமுக அரசு நாடகமாடிய விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியில் பழைய சர்வே எண் 21, 23, 25 மற்றும் 26 ஆகியவற்றின் மொத்த பரப்பளவு 5 புள்ளி 38 ஏக்கரில் உள்ள, வடபழனி கோயில் பெயரில் உள்ள பட்டா நிலத்தை மீட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சொத்து கோவிலின் பெயரில் இருக்கும் போது, அதை யாரிடம் இருந்து மீட்டார்கள் என்னும் கேள்வி எழும் நிலையில், அந்த இடத்தில் வாடகை கொடுக்காமல் வாகனங்களை பார்க்கிங் செய்தவர்களிடம் இருந்து மீட்டது தெரிய வந்துள்ளது.
காலி நிலத்தில் வாகனங்கள் நிறுத்தியவர்கள் வாடகை தரவில்லை என்ற காரணத்தால், இனி அங்கு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். இதனை தான் சொத்தை மீட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. ஒருவராலும் ஆக்கிரமிக்கப்படாத சொத்து, ஒருவராலும் ஆவணத் திருத்தம் செய்யப்படாத சொத்து எப்படி ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதாகும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Discussion about this post