திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, சிதம்பரம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 14 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூடுவெளி கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக 14 பேர் பணியாற்று வந்த நிலையில், அவர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த தொகுப்பூதிய விரிவுரையாளர்கள், பணி நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டுமென கல்லூரி வளாகத்தில் நின்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். தொகுப்பூதிய பணியாளர்கள் அனைவரும் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள் என தேர்தல் அறிக்கையில் திமுக கூறியுள்ள நிலையில், இந்த பணி நீக்கம் உத்தரவு தங்களது வாழ்வாதாரத்தை வெகு பாதித்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
Discussion about this post