நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மகளிர் குழு என்ற பெயரில், தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் பணம் கேட்டு தொடர் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் சில அத்தியாவசிய காரணங்களுக்காக தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வாரம் மற்றும் மாத தவணைகளில் அப்பணத்தை திருப்பி செலுத்தி வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்களை, சில தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழு என்ற பெயரில் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, மாதம் மற்றும் வாரத் தவணைகளாக வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வருமானம் இல்லாத தற்போதைய சூழ்நிலையிலும் கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் அரசு உடனடி தீர்வுகாணவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post