இலங்கை அரசின் முக்கிய 6 இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்:
இலங்கையில் உள்ள 6 இணையதளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சகத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளங்கள் உள்ளிட்ட மேலும் சில இணையத்தளங்கள் சைபர் (இணைய) தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதை இலங்கை விமானப்படையின் இணைய பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தியது.
இந்த இணையத்தளங்களை மீண்டும் இயல்புக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஒருங்கிணைப்பு மையம் (SLCERT) ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post