இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமே தினசரி பாதிப்பு 27 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் தொற்று பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 795 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 500 பேரும், தமிழ்நாட்டில் 478 பேரும், கர்நாடகாவில் 411 பேரும் பலியாகியுள்ளனர்.
தினசரி பாதிப்பை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 18 லட்சத்து 95 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 21 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
Discussion about this post