திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படாமல் இருந்த கொரோனா சிகிச்சை வார்டு, நியூஸ் ஜெ செய்தியின் எதிரொலியாக 3 மணி நேரத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.
திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட100 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் செயல்பாட்டுக்கு வராமல் மூடப்பட்டுள்ளதாகவும்,
ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் அமைக்கப்படாமல் பயனற்று நிற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்த செய்தி நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதையடுத்து சிகிச்சை மையம் உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, தற்காலிக கொட்டகையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இந்த மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Discussion about this post