திருச்சியில், விதிகளை மீறியதாக பறிமுதல் செய்த வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தண்ணீர் தெளித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியதாக மூன்றாயிரம் இருசக்கர வாகனங்கள், ஆறு கார்கள், 9 ஆட்டோக்கள் மற்றும் மூன்று லாரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கோடை காலம் என்பதால், வெட்ட வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து பெட்ரோல் கசிந்தால் தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, காவல்துறை சார்பில் வஜ்ரா வாகனம் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வாகனங்கள் குளிர்விக்கப்பட்டன.
Discussion about this post