நம்மில் யாரும் புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கத்தோடு பிறப்பதில்லை, இடையில் வந்த பழக்கத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்து ’உலக புகையிலை எதிர்ப்பு’ தினமான இன்று தெளிவாக காண்போம்…
பரபரப்பான உலகில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க புகையிலை பொருட்களை பயன்படுத்தும் ஆபத்தான நாகரீகம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
புகையிலை பழக்கம் உள்ளவர்களில் 85 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோய்க்கு உள்ளாகும் நிலையில், அந்த புகையை சுவாசிப்பவர்களில் 30 சதவீதம் பேருக்கு அதே பாதிப்பு ஏற்படுவது மிகப் பெரிய கொடுமையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், ஒவ்வொரு நிதியாண்டிலும் சிகரெட்டின் விலையை உயர்த்தியும், அதனை புகைப்பவர்களின் எண்ணிக்கை குறையவே இல்லை என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் ஆண்களை விட, அதிக அளவு பெண்கள் புகை பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக அதிர்ச்சிகர தகவலையும் மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவை பொறுத்த வரை, புகைப்பழக்கம் மற்றும் போதை பழக்கத்திற்கு ஆண்களுக்கு நிகராக பெண்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்களால் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் 2 பில்லியன் மக்கள் இறக்கின்றனர். மேலும், புகைப்பழக்கம் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த ஆரோக்கியமற்ற பழக்கத்தில் எந்தப் பங்கும் இல்லாத குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆளாவதாக வேதனை தெரிவித்துள்ளது.
புகையிலை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இனி வரும் காலங்களில் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு,
புகையிலை பழக்கம் உள்ளவர்கள் சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நாளை இலக்காக வைத்து, படிப்படியாக அதன் பயன்பாட்டை நிறுத்தலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது.
உலகெங்கும் 5 சதவீதம் பேர் ஒரே நொடியில் தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுக்காக புகைப்பழகத்தை கைவிடுகிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்த நிலையில்,
உங்களை நேசிப்பவர்களுக்குக் கொடுக்கும் பரிசாக இதை கருத வேண்டுமென்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது…
Discussion about this post