நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் 10 நபர்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசியை 12 நபர்களுக்கு செலுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வழக்கமாக செலுத்த வேண்டிய அளவைக் காட்டிலும் குறைந்த அளவு தடுப்பூசி மருந்தை பொதுமக்களுக்கு செலுத்த அதிகாரிகள் வற்புறுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதர நிறுவனம் வகுத்துள்ள விதியின் படி ஒரு மருந்து குப்பியில் இருந்து 10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும்.
ஆனால் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஒரு வயலில் 12 பேருக்கு தடுப்பூசி போடப்படுவதாக ரமேஷ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அங்கிருந்த செவிலியரிடம் விளக்கம் கேட்டபோது உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரிலேயே ஒரு குப்பி மருந்தை 12 பேருக்கு செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட போது ஒரு வயலில் இருந்து 10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாக மழுப்பலாக பதில் அளித்து நழுவினார்.
Discussion about this post