ஒரு சினிமா, மொழிகளைக் கடந்து எல்லோரையும் சென்று சேர்வது, எப்போதாவது நிகழும் மேஜிக்.. பிரேமம் எனும் மேஜிக் வெளியாகி 6 ஆண்டுகள் கடந்த நிலையில், மலையாளிகளை விட தமிழ் மக்கள் அதிகம் கொண்டாடியதன் காரணம் என்ன? ஒரு சிறிய தொகுப்பு…
வரலாற்றை சற்றே கிளறிப் பார்த்தால், கேரளாவோடு தொடர்பு இருப்பது போன்று எடுக்கப்பட்ட படங்கள், நம்முள் தனித்த இடம் பிடித்தவை…
‘அந்த 7 நாட்கள்’, ‘ஆட்டோகிராஃப்’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’… போன்ற படங்களின் அடிநாதம், ‘நிறைவேறாக் காதல்’..
இந்த வரிசையில் இடம்பெற்ற பிரேமம், மிகவும் அழகானது!
மூன்று பெண்களால் George-இன் வாழ்க்கையில் இன்பம், துன்பம் என மாற்றங்கள் ஏற்படுவதை, கொஞ்சம் ஆட்டோகிராஃப், நிறைய அட்டகத்தி என, malayalam flavour இல் கலந்து கட்டி படைக்கப்பட்ட விருந்து..
“Butterfly is mentally mental, so is love” — இதுதான் ப்ரேமம் படத்தின் முழு கதை.
காதலை ஒரு விதமான பரவசத்துடன் படம் முழுவதும் காண்பித்திருப்பார் அல்போன்ஸ் புத்திரன்…
பிரேமத்தில் காட்டப்பட்ட முக்காதல்களில், பெரும்பான்மையான மக்களால் விரும்பப்பட்டது ‘மலர்-ஜோர்ஜ்’ காதலே.
கல்லூரி காலத்தில் வரும் காதலே இளைஞர்களால் கொண்டாப்படுகிறது.
Kalipu பின்னணி இசையுடன் அறிமுகமாகும் கல்லூரி காலம்…
மலர் டீச்சரின் குத்து டான்ஸ்…
ஒங்க பேர் என்ன சொன்னீங்கன்னு மலர் கேட்டதுமே ஜார்ஜ் வெதும்புவது…
செலின் தான் யாரென்று அறிமுகப்படுத்துவது…
படம் முடியும் போது மலரும் அறிவழகனும், ஜார்ஜை பற்றி பேசிக்கொள்வது என அத்தனையும் அவ்வளவு அழகு..!
படம் நெடுக இழைந்தோடும் இயல்பான மென் நகைச்சுவையும், கேரளாவில் பிறந்து வளர்ந்த தமிழரான ராஜேஷ் முருகேசனின் கிறங்கடிக்கும் இசையும், ஒரு வித மயக்கத்திலேயே நம்மை வைத்திருக்கும்…
“பிரேமம் படத்தின் அழகே, அதன் குறைகள் தான். எனவே, படத்தை ரீமேக் செய்ய விரும்புபவர்கள், Perfect ஷாட்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.” அல்போன்ஸ் புத்திரன் முகநூலில் பதிந்திருந்த ட்வீட் இது.
அல்போன்ஸ் சொன்னதுதான் உண்மையும் கூட. வழக்கமான சினிமா பாணிக்குள் அடக்காமல், அது போக்கிலேயே போய் பிரேமத்தை படம் பிடித்திருந்தது தான், படத்தின் அழகும்!
அந்த பிரேமம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இன்னுமும் பிரேமம் படம் பார்க்காதவர்கள் இருக்கலாம், ஆனால் படம் பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. பிரேமம் என்றென்றும் ஸ்பெஷல்…
நியூஸ் ஜெ செய்திகளுக்காக பிரவீன்குமார்…
Discussion about this post