கர்நாடக தொழிலதிபதிரிடம் சுமார் ஏழு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைதான ஹரி நாடாரின் வங்கி கணக்குகளை பெங்களூர் போலீசார் முடக்கி உள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த வெங்கட் ரமணி என்ற தொழிலதிபரிடம் சுமார் 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், கர்நாடாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவரிடமிருந்த தங்கம், ரொக்கம் மற்றும் சொகுசு கார்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது .
இந்த நிலையில், ஹரி நாடார் மற்றும் அவருடன் தொடர்பு உடையவர்களின் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை பெங்களூரு போலீசார் முடக்கியுள்ளது.
மேலும், ஹரி நாடாருடன் தொடர்புடையர்களுக்கு சம்மன் அனுப்பி காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்
Discussion about this post