சட்டத்துறையில் 3 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கான பயிற்சி தொடக்க திட்ட விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அரசு முயற்சி எடுத்து வருவதாக கூறினார். இதற்காக அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும், நீதித்துறையில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
85 சதவீத நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட தொடங்கியுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், இதை 100 சதவீதமாக நிறைவு செய்ய அரசு உறுதி பூண்டு இருப்பதாக தெரிவித்தார்.
Discussion about this post