கட்டுப்படுகளுடன் கூடிய முழுமையான முறையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்; ஆனால் அதில் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் கடந்த கால ஆட்சியில் இருந்தது போல், அதே நிலை இந்த ஊரடங்கிலும் கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறினார்.
மேலும் 40% நுரையீரல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடும் போது கவலை அளிக்கும் விதத்தில் தமிழகத்தின் நிலை உள்ளதாகவும் கூறினார்.
அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்க்ரீனிங் சென்டர் உருவாக்க வேண்டும் எனவும், அப்படி அமைத்தால் மட்டுமே மக்களிடம் ஏற்படும் பதற்றத்தை தணிக்க முடியும் எனவும், கிராம புறங்களில் கொரோனா பாதித்தவர்களை கண்காணிக்க வேண்டும், அவர்கள் வெளியில் வராமல் இருக்கும் படி கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளுடன் நாள்தோறும் அரசு ஆலோசனை நடத்தி எப்படி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும்,
மூன்றாம் அலையை எதிர்கொள்ள மிக சிறப்பான ஆக்சிஜன் கட்டமைப்பை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
ஊரடங்கு என்பது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என கூறிய அவர், பால், காய்கறி போன்றவற்றை வீட்டுக்கு சென்று விநியோகம் செய்ய வேண்டும் என்றும்,
வாகன சோதனையில் தன்னார்வளர்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்
Discussion about this post