கருப்பு பூஞ்சை பாதிப்பை கையாள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை பாதிப்பை, தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முகத்தில் வீக்கம், கண்களுக்கு கீழ் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, வாயில் திரவம் வழிதல், ஈறுகளில் புண், பற்கள் வேறு இடங்களில் வளர்வது உள்ளிட்டவை இந்நோய்க்கான அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த அறிகுறிகளுடன் வரும் நோயாளிக்கு, கொரோனா தொற்று வந்ததா? எந்த அளவுக்கு வந்தது, என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நோயின் தீவிரத்தை அறிய, மூக்கு மற்றும் கண் பகுதிகளில் சி.டி. ஸ்கேன் அல்லது முகம் முழுவதுக்குமான எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள், ரத்த பரிசோதனையும், 2 நாட்களுக்கு ஒருமுறை சிறுநீரகம் மற்றும் எலக்ட்ரோலைட் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post