ஜக்கி வாசுதேவ் பற்றி சமீபகாலமாக ஆவேசமாக பேசி வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திடீரென அந்தர் பல்டி அடித்துள்ளார்.
ஈஷா இயக்கத்தை சேர்ந்த ஜக்கி வாசுதேவ் தொடர்பாக அண்மைக்காலமாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக பேசி வந்தார்.
விவாதங்களில் பழனிவேல் பேசியவை சமூக வலைதளங்களில் பேசு பெருளாக மாறியது. இந்நிலையில், இனி ஜக்கி வாசுதேவ் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜக்கி வாசுதேவ் மீது விசாரணையை தொடங்குவது தன்னுடைய துறை சார்ந்த வேலை இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபுவுக்கும் நிதிமையச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்காலம் என்றும், இதன் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின், பழனிவேல் தியாகராஜனை கண்டித்திருக்கக்கூடும் என்பதை இந்த அறிக்கை மூலம் அறிய முடிகிறது.
மேலும், இம்மாத இறுதிவரை ஊடகவியலாளர்களை சந்திக்க போவதில்லை என அவர் தெரிவித்திருப்பதன் மூலம் இதுவரை ஆவேசமாக பேசி வந்த பழனிவேல் தியாகராஜன் அந்தர் பல்டி அடித்துள்ளதாக சமூக வலைதளவாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்
Discussion about this post