டாலருக்கு எதிராக சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்க, 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.
அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போர் காரணமாக அந்நிய சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், 15 பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
தொலைத் தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மின்னணு பொருட்கள் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. ஆடம்பர பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படாத பொருட்கள் மீதான வரியை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Discussion about this post