இஸ்ரேலில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடலை பெற்றுக் கொண்ட வெளியுறவு இணையமைச்சர் முளிதரன், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோனி யெடிடா கிலேன் ஆகியோர் சவுமியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சவுமியாவின் உடல் கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள அவருடைய சொந்த கிராமமான கீரிதோடு ((Keerithodu)) அனுப்பி வைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 30 வயதான சவுமியா, சந்தோஷ் என்பவரை மணந்து இஸ்ரேலில் உள்ள ஆஷ்கிலோன் நகரில் கடந்த ஏழு ஆண்டுகளாக வீட்டு பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்தார்.கடந்த 12ம் தேதி காசா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கேரளா பெண் சவுமியா உள்பட 33 பேர் உயிரிழந்தனர்.
Discussion about this post