இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில், தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக எரியூட்ட தற்காலிக தகன மேடைகளை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் கண்ணியத்தை மீறும் வகையில் மொத்தமாக சடலங்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ கூடாது எனவும் சடலங்களை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post