நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, இன்று லிட்டருக்கு 94 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த 4ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்ந்தி வருகின்றன. நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 93 ரூபாய் 84 காசுகளுக்கும், டீசல் 87 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து 94 ரூபாய் 9 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 87 ரூபாய் 81 காசுகளுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைப்பதாக ஸ்டாலின் அறிவித்து இருந்தார். ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாவதற்கான சுவடே தெரியவில்லை என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post