ஜம்மு காஷ்மீரின் இரண்டாவது பெரிய ஏரியான தால் ஏரியில், மிதக்கும் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கி உள்ளது.
தால் ஏரியை சுற்றியுள்ள மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், சமூக செயற்பாட்டாளர் அகமது பட்லு, மிதக்கும் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மிதக்கும் ஆம்புலன்ஸை உருவாக்கியுள்ளதாகவும், அதில், பாதுகாப்பு கவச உடைகள், ஸ்டெரச்சர், சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
Discussion about this post