கோபிசெட்டிபாளையம் அருகே, போதையில் அட்டகாசம் செய்த கூலித் தொழிலாளியை, கட்டையால் அடித்து கொலை செய்த இளைஞரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. கூலி வேலை செய்துவந்த இவர், மதுபோதைக்கு அடிமையானவர்.
இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு, அருகில் உள்ள வீடுகளிகளில் குடியிருப்பவர்களிடம் வம்பிழுப்பதுண்டு.
இந்த நிலையில், குடிபோதையில், வேலுச்சாமி அதே பகுதியில் உள்ள பூபதி என்பவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இதனால், வீட்டிற்குள் இருந்த பூபதி வெளியே வந்து, வேலுச்சாமியிடம், ஏன் குடிபோதையில் அடுத்தவர்களின் வீடுகளுக்குள் நுழைக்கிறாய் என்று தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ஆத்திரமடைந்த பூபதி, அருகில் இருந்த மூங்கில் கட்டையால் வேலுசாமியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்துபோன வேலுசாமி, ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், வேலுசாமியை மீட்டு சிக்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்கததால், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனாலும், சிக்ச்சை பலனின்றி வேலுச்சாமி உயிரிழந்தார்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் பூபதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தினால் பொலவக்காளிபாளையம் பகுதியில் பதட்டம் நிலவியது.
Discussion about this post