சோத்துப்பாறை அணையின் மதகில் ஏற்பட்ட பழுது, பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது.
அதிகாரிகளின் அலட்சியத்தால் அணையில் இருந்து 15 அடி தண்ணீர் வீணாக வெளியேறியது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற அதிகாரிகள் நேற்று முயன்றபோது, மதகில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
பல மணி நேரம் போராடியும் மதகில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அணையிலிருந்து நீர் சேறும் சகதியுமாக வெளியேறியது. பல மணி நேர போராட்டத்திற்கு பின் இன்று 12 மணி அளவில் மதகு சரி செய்யப்பட்டது.
இடைப்பட்ட நேரத்தில் அணையில் இருந்து 15 அடி தண்ணீர் வீணாக வெளியேறியது.
இதனால் பெரியகுளம் நகராட்சி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள வடுகபட்டி, தென்கரை பேரூராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post