சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வாசலில், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்துக் கிடக்கும் அவலம் நிலையை குறித்து விளக்குகிறது, இந்த செய்தித் தொகுப்பு.
அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், இரவு நேரங்களில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகள், மருத்துவமனை வாசலில் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றனர்.
அவ்வாறு காக்க வைக்கப்படும் நோயாளிகளுக்கு, படுக்கைகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
படுக்கை கிடைக்காததால் உயிருக்குப் போராடும் நோயாளியை பார்த்து, உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் இதயத்தை உலுக்குகின்றன.
கொரோனோ வார்டில் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்துவதில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாலும், தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை ஊழியர்கள் படுக்கை வசதியை ஏற்படுத்தித் தருவதாலும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காவல்துறையினருடன் வாக்கு வாத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், அரசு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது!
Discussion about this post