அரசு மருத்துவமனையில் அலைகழிப்பு கொரோனா பாதிப்புக்குள்ளான பெண் மூச்சு திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழப்பு.
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆஷா. 60 வயதான இவருக்கு ஆக்சிஜன் லெவல் குறையவே நேற்று இரவு திருவான்மியூரில் உள்ள ஸ்டார் லைஃப் என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களிடம் நேற்று ஒருநாள் இரவு மட்டுமே சுமார் ஒரு லட்சம் ரூபாயை பறித்த அந்த தனியார் மருத்து மனை இதற்கு மேல் ஆக்சிஜன் தர இயலாது அரசு மருத்துவ மனைக்கு மாற்றுங்கள் என்று கூறியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் எந்த அரசு மருத்துவமனையிலும் இடம் இல்லாமல் மேலும் ஒருதொகையை செலுத்தி இரவை கழித்தனர். இன்று காலை 7 மணியளவில் ஓமந்தூரர் மருத்துவ மனைக்கு நிஷாவை கொண்டு வந்த 11 மணி வரை சிகிச்சை அளிக்காமல் 11-30 மணியளவில் சுமார் 5 மணிநேரம் கழித்து உள்ளே அழைத்து சென்றனர் இன்று 12 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது கணவர் ராதாகிருஷ்ணன் அவரோடு இருந்ததால் அவருக்கு பரிசோதனை தேவையாகியுள்ளது. அவரது மகன் நவீன் வயது 35 என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி எந்த மருத்துவ மனையிலும் இடம் இல்லாமல் அலைந்து வருகிறார். அவரது கர்பிணி மனைவியும் இதனால் மனதளவில் பாதிப்படைந்துள்ளார்.
Discussion about this post