தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்து 125 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையின் வீரியம் அதிகம் இருப்பதால் பாதிப்பும் அதிக அளவில் இருக்கிறது.
கொரோனா தொற்றால் கடந்த மே ஒன்றாம் தேதியில் இருந்து 7 ஆம் தேதி வரை 7 நாட்களில் 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்து 125 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
குறிப்பாக சென்னை, செங்கல்கபட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் தான் தொற்று பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
அதேபோல தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் ஒரு நாள் பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது அச்சத்தை அதிகரித்து இருக்கிறது.
அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உயிரிழப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று ஒரே நாள் தமிழகம் முழுவதும் 197 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதில் 93 பேர் இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
Discussion about this post