இந்தியாவில் கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனை சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பு ஏற்பட்ட மேலும் 3 ஆயிரத்து 780 பேர் உயிரிழந்ததை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் குணமடைந்தனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 4 நாட்களாக குறைந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post