இந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. வடஇந்தியாவை தொடர்ந்து தென்இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்றுஒரே நாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பரவலை போல உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஒரு கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 15 கோடியே 22 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post