தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தன.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மே ஒன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த உள்ள நிலையில், கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, மும்பையில் இருந்து விமானம் மூலம் மேலும் மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.
பின்னர் விமான நிலையத்திலிருந்து சரக்கு வாகனம் மூலம் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன.
இதுவரை 70 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க ஒன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post