அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளை ஒன்றாக எதிர்கொள்ள இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருப்பதாகவும், தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்று கூறினார்.
சீனா மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் அமெரிக்கா அதிகளவு தலையிடுவதாகவும்,சர்வதேச அளவில் நிலவி வரும் சூழலை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விரும்புவதாகவும் அப்போதுதான் அமெரிக்கா போன்ற நாடுகளின் வர்த்தக போரை எதிர்கொள்ள முடியும்’ என்று தெரிவித்தார்.
Discussion about this post