கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து மிக பிரமாண்டமான ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர், விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதனைடுத்து சிங்கப்பூர்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து மிக பிரமாண்டமான ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்களை வாங்க, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்படி, சிங்கப்பூரில் இருந்து 4 ஆக்சிஜன் டேங்கர்களுடன் விமானப்படை விமானம் புறப்பட்டது.
இந்த விமானம் நேற்றிரவு இரவு மேற்கு வங்கத்தில் உள்ள பனகர் விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கைகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post