ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள், ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக திரிபாதி 36 ரன்களும், தினேஷ் கார்த்திக் 25 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணியின் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் பட்லர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சாம்சன் 42 ரன்களில் வெளியேற, இறுதியில் டேவிட் மில்லர் 24 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை 7 பந்துகள் எஞ்சிய நிலையில் உறுதி செய்தார்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி நடப்பு தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்தது.
Discussion about this post