இந்தியாவில் இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லடசத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post