தமிழ்நாட்டில் வேகமெடுத்து வரும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வெளிநாடுகள்,வெளி மாநிலங்களைச் சேர்ந்த 55 பேர் உள்பட, தமிழகம் முழுவதும் புதிதாக 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 6 ஆயிரத்து 689 பேர் ஆண்கள் என்றும், 4 ஆயிரத்து 297 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 3 ஆயிரத்து 711 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 275 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 29 பேரும், கோவை மாவட்டத்தில் 686 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 508 பேரும், சேலம் மாவட்டத்தில் 382 பேரும், மதுரை மாவட்டத்தில் 366 பேரும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில், மொத்த பாதிப்பு 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 369 ஆக உள்ளது.
தற்போது, 79 ஆயிரத்து 804 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
Discussion about this post