செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு நாசா புதிய சாதனை படைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய INGENUITY என்ற இலகு ரக ஹெலிகாப்டரை பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டது.
இதற்காக 10 ஆண்டுகளாக ஆய்வு செய்த நாசா, ஒரு கிலோ 800 கிராம் எடையில், பூமியில் இயங்குவதை விட வேகமாக இயங்கும் வகையிலான ஹெலிகாப்டரை வடிவமைத்தது.
INGENUITY என அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர், பெர்சிவரன்ஸ் (Persecerance Rover) உதவியுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அடைந்தது.
பின்னர், கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கோளில் ஜெசரோ க்ரேடர் என பெயரிடப்பட்டுள்ள பகுதியில் தரையிரங்கியது.
அங்கு பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சி தொழில்நுட்ப காரணமாக இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது.
INGENUITY ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட்டதன் மூலம் நாசா விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
Discussion about this post