பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நடைபெறும் தேதி 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மே 5ம் தேதி நடைபெறவிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த விவரம், தேர்வுகள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வு மற்றும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை அறிவுறுத்தப்பட்ட நாட்களில் இணையதளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட விவரத்தை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்டத்தில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும், தலைமை ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுளுக்கு தெரிவிக்குமாறும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.
Discussion about this post