தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வரும் 20ஆம் தேதி முதல், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
அதே போன்று, வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை செயல்பட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகளின் போது, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இரவு ஊரடங்கின் போது, அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள்,மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் உள்ளிட்டவற்றும் அனுமதி வழங்கப்படுகிறது.
அதே போன்று, மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
இரவு ஊரடங்கின் முக்கிய அம்சங்கள் :
* ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்
* தனியார், பொது பேருந்து போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது
* வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதியில்லை
* அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி
* பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு அனுமதி
* மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள்,எரிபொருள் வாகனங்களுக்கு அனுமதி
* மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளின் போது, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்
Discussion about this post