பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை இந்தி திரையுலகம் ஒதுக்கி வருகிறது. அந்த அடிப்படையில் தமிழ் திரையுலகில் இருந்து வைரமுத்து ஒதுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆமிர்கான்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக அடையாளம் கொண்டவர். அவருடைய படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மொகுல் என்ற திரைப்படம் எடுக்கப்பட இருந்தது.
அதனை சுபாஷ் கபூர் என்பவர் இயக்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த இயக்குனர் சுபாஷ் கபூர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வழக்கு தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இயக்குனரை தமது படத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஆமிர்கான்.
திரையுலகம் என்பது அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், அதனால் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
வழக்கமாக இந்தி திரையுலகின் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், கதைக்களங்கள், விழாக்கள் போன்றவை தமிழ் திரையுலகில் பின்பற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இயக்குனரை படத்தில் இருந்து ஆமிர்கான் நீக்கியது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
அதனையே முன்னுதாரணமாக கொண்டு தமிழ் திரையுலகில் பாலியல் சர்ச்சைகளில் சிக்குபவர்களை பயன்படுத்துவதில்லை என்று பின்பற்றப்படுமானால் கோலிவுட்டில் ஒழுக்கம் தழைக்கும் என்று திரையுலகினர் கருதுகின்றனர்.
சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். ஆமிர்கான் பாணியில், தமிழ் திரையுலகத்தினரும் வைரமுத்துவை தங்கள் படங்களில் பாடல் எழுத ஒப்பந்தம் செய்யப் போவதில்லை என்று முடிவு எடுப்பார்களா என என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Discussion about this post