கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஏற்கனவே விதித்துள்ளது. ஆனாலும், தினசரி தொற்றானது கூடுதலாகி வருவதால், அதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் நேரக்கட்டுப்பாடுகளை மாற்றி அமைப்பது, வார இறுதி நாட்கள் அல்லது இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post