கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கோயில் திருவிழாக்களுக்கு தளர்வு கோரி கிராமியக் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை நீக்கி, கிராமியக் கலை நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீத தளர்வு வழங்கக் கோரி, விருதுநகரில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற நாடக கலைஞர்கள், பல்வேறு வேடமணிந்து தங்கள் வாத்தியக் கருவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மனு அளித்தனர்.
இதேபோல், கோயில் திருவிழாக்களுக்கு தளர்வு கோரி, திருவாரூர் மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள், கடவுள்கள் வேடமணிந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவிழாக்களை மட்டுமே நம்பி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் நான்கு மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களை நம்பியே தங்களின் வாழ்வாதாரம் உள்ளதாகவும் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாடுகளை தளர்த்தி வாழ்வாதாரத்தை காக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
சிதம்பரம் ஸ்ரீ முத்தாரம்மன் நாட்டுப்புற கிராமிய நையாண்டி மேளம் மற்றும் கரகாட்ட கலைஞர்கள் சங்கத்தினர் சார்பாக, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். இரவு நேரங்களில் நாட்டுப்புற மற்றும் நாடக கலைகளுக்கு அனுமதி வழங்கி, தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Discussion about this post