கோவாக்சின் தடுப்பூசியின் 3-வது டோஸ் செலுத்தினால், வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பு சக்தி கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக, ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தடுப்பூசியை வலது, இடது என எந்த கைகளில் செலுத்திக் கொண்டாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினால், 81 சதவீத எதிர்ப்பு சக்தியும், கோவிஷீல்டு தடுப்பூசி 79 சதவீதம் எதிர்ப்பு சக்தியும் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறிய தேரணி ராஜன், கோவாக்சின் தடுப்பூசியில், 19 சதவிகிதம் என்ற அளவை குறைத்து, எதிர்ப்பு சக்தியின் சதவீதத்தை மேலும் அதிகரிக்க ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
Discussion about this post