பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே .அக்பர் ராஜினாமா செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பத்திரிகையாளராக இருந்தார். இவர் பத்திரிகையாளராக இருந்த போது தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
மத்திய அமைச்சருக்கு எதிரான இந்த புகார் குறித்து மத்திய அரசு இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு மவுனம் சாதிக்க கூடாது என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி, மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஒரு திருப்திகரமான பதிலை தெரிவிக்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post