அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணையில், 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்களை, ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. சூரப்பா மீது புகார் அளித்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பாவின் பதவிக்காலம் வருகிற 11ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், சூரப்பா மீதான விசாரணையில், 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார். தேர்தல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டதாகவும், சூரப்பா நாளை மறுநாள் ஓய்வு பெறும் நிலையில், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதியரசர் கலையரசன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post