வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் ஒன்றாக VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
VVPAT (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள், வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.
வாக்காளர்கள் தங்களின் விருப்பமான வேட்பாளருக்கு ஓட்டை பதிவு செய்த பின், இந்த VVPAT இயந்திரம் ஒப்புகைச் சீட்டு ஒன்றை காட்டும். அதில் வாக்காளர் தேர்வு செய்த வேட்பாளரின் பெயர் மற்றும் அவரின் தேர்தல் சின்னம் இடம்பெற்றிருக்கும். இந்த ஒப்புகைச் சீட்டை ஏழு விநாடிகளுக்கு மட்டுமே பார்க்கமுடியும்.
2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் VVPAT இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதன்படி VVPAT உடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
VVPAT முதன்முறையாக 1999 இல் நடந்த கோவா சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
Discussion about this post