தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் உறவினருடைய 3 வேன்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவரான சுசிலா தனஞ்செயனின் உறவினரான தாஸ், விளாத்திகுளம் தொகுதி அதிமுக
வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக புதூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகவீரபுரம்
திமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், தாஸை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், தாஸ்க்கு சொந்தமான 3 வேன்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காடல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து திமுக பிரமுகர் அழகு பாண்டி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
Discussion about this post