News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நாளை மாலை 7 மணிக்குள் வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்: தேர்தல் ஆணையம்

Web Team by Web Team
April 3, 2021
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நாளை மாலை 7 மணிக்குள் வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்: தேர்தல் ஆணையம்
Share on FacebookShare on Twitter

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6.4.2021 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும். 4.4.2021 அன்று மாலை 7.00 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

(1) தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

(2) யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

(3) பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

(4) தொகுதி வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 4.4.2021 அன்று மாலை 7.00 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

(5) கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும்.

(6) வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 4.4.2021 அன்று மாலை 7.00 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.

(7) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் பின்வரும் எண்ணிக்கையில் வாகன அனுமதி அத்தொகுதியில் பெற உரிமை உண்டு.
அவை வருமாறு:-
(i) அவரது சொந்தப் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்
(ii) தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் மற்றும்
(iii) கூடுதலாக, அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்களின்
பயன்பாட்டிற்கான ஒரு வாகனம்.

(8) வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

(9) இரண்டு நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் தற்காலிக பிரச்சார அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது.

Tags: தேர்தல் ஆணையம்
Previous Post

தைவான் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு

Next Post

ஆசையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள்… வலை யாருக்கு?

Related Posts

உதயநிதிக்கு 5 மணி வரை கெடு!
TopNews

உதயநிதிக்கு 5 மணி வரை கெடு!

April 7, 2021
துரைமுருகன், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!
TopNews

துரைமுருகன், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

April 5, 2021
ஆ.ராசா எம்.பி. பதவி பறிக்கப்படுமா? தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என அறிவிப்பு
TopNews

ஆ.ராசா எம்.பி. பதவி பறிக்கப்படுமா? தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என அறிவிப்பு

March 29, 2021
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தபால் வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
TopNews

மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு தபால் வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

October 5, 2020
காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
TopNews

காலியாக உள்ளத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

September 29, 2020
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே செயற்குழு கூடுகிறது  – அமைச்சர் ஜெயக்குமார்
TopNews

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே செயற்குழு கூடுகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

September 27, 2020
Next Post
ஆசையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள்… வலை யாருக்கு?

ஆசையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள்... வலை யாருக்கு?

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version